• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் 3வது வார்டுக்கு உட்பட்ட எட்டையபுரம் ரோடு ஹவுசிங் போர்டு சந்திப்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி பழம், நீர் மோர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார். 

தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் பொது மக்களுக்கு மோர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் ஐ.என். டி.யு.சி தொழிற்சங்க தலைவர் ராஜ், மணி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, குமாரமுருகேசன், நெப்போலியன், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் எட்வர்ட், பெத்துராஜ், ஐ.என். டி.யு.சி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா

  • Share on