தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மஞ்சள் கடத்தல் 5 பேர் கைது
சோதனையில்,அந்த படகில் 88 பைகளில் சுமார் 3 ஆயிரம் கிலோ மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மஞ்சளை நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்தவர்களிடம் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து,
நரிப்பையூரை சேர்ந்த முகமது (50), வாலமைதீன் (49), சீனி (34), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த முத்துராஜா (20), சாமுவேல்புரத்தை சேர்ந்த நாகூர் மீராஜா (38) ஆகிய 5பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து படகு மற்றும் அதில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மஞ்சளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேர் மற்றும் மஞ்சளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.