தூத்துக்குடி மாவட்டத்தில் 24.04.2022 அன்று காலை 11.00 மணியளவில் கயத்தார் வட்டம் கடம்பூர் கிராமத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
24.04.2022 அன்று காலை 11.00 மணியளவில் கயத்தார் வட்டம் கடம்பூர் கிராமம் மாரியப்பன் நாடார் ராமலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மனுக்களை பெறுகிறார்கள். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.