• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. 

முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள உ வர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

  • Share on

பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் - மாவட்ட அதிகாரி ரதிதேவி

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தகவல்

  • Share on