• vilasalnews@gmail.com

பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் - மாவட்ட அதிகாரி ரதிதேவி

  • Share on

மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பூமி பாதுகாப்பு  தினவிழாவில் மரங்கள் நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அதிகாரி ரதிதேவி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.           

நிகழ்ச்சிக்கு மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி  முன்னிலை வகித்தார். 

முன்னதாக தையல் பயிற்சி மாணவி செல்வி. மெபிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அதிகாரி ரதிதேவி கருத்துரை  வழங்கினார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது :

பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து தென் துருவப் பனிப் பிரதேசம் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உருகுவதன் மூலம் கடலில் நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் செயல்களை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். காற்றை தூய்மைப்படுத்தும் காடு வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும். 

சூரிய ஒளியிலிருந்து வரும் அகசிவப்பு கதிர், புறஊதாக் கதிர்களின் அபாயத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் மெலிந்து அதில் துளை ஏற்படும் அபாயத்தை பாதிக்கக் கூடிய இரசாயன மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது அல்லது தவிர்ப்பது மிக அவசியம் . மேலும் மனிதர்களாகிய நமக்கு கிடைத்துள்ள இந்த பூமியை பாதுகாக்க முன்வரவேண்டும் பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது இந்த பூமியும் இனிது, அதை காப்பது அதைவிட இன்பம். இந்த பூமியை காக்க பூமி வெப்பமயமாதலை தடுக்க அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும் என அவர் கூறினார். 

முடிவில் தையல் பயிற்சி மாணவி செல்வி. ரிபான்சி அவர்கள் நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்று ஓரங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பறவைகளின் உணவுக்கு பயன்படும்  பழ வகை   மரக்கன்றுகள் 100 நடப்பட்டது

இதில் தையல் பயிற்சி மாணவிகள், வளர் இளம் பெண்கள். மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் பணியாளர்கள்  செய்திருந்தனர்.

  • Share on

சென்னையில் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

  • Share on