தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 19ம் தேதியான இன்று மேயர் ஜெகன் பெரியசாமியை முத்தம்மாள் காலனி பகுதி நலசங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது, 5வது தெரு கிழக்கு, மேற்கு, 9,10 வது தெரு மற்றும் 2,6 வது குறுக்கு தெரு ஆகிய தெருக்களில் தார் சாலைகள் அமைக்கப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றிட தர நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தம்மாள் காலனி பகுதி நலச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நமது நலச்சங்கத்தின் நிர்வாகிகளான தலைவர் தங்கராஜா, பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் சண்முகராஜ், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி பொன்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, திமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.