கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூவை கனிமொழி எம்.பி பாராட்டி பேசினார்.
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா இன்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் கி.நிர்மலா வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கல்லூரியில் 2017-2020, 2018- 2021-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்த 522 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது விழாவில் பேசிய கனிமொழி எம்.பி. " கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நிறைய பாடுபட்டு இருக்கிறார். இந்த மேடையில் கட்சி மாச்சரியங்களை தாண்டி அவருக்கு எனது நன்றியை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்".