தூத்துக்குடியில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 30). இவர், கணவர் மற்றும் சகோதரருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி காளீஸ்வரியின் காலில் கிடந்த கொலுசை நைசாக கழற்ற முயன்றாராம். இதனால் திடுக்கிட்டு விழித்த காளீஸ்வரி சத்தம் போட்டு உள்ளார். உடனடியாக மர்ம ஆசாமி வீட்டில் இருந்து காளீஸ்வரியின் சகோதரரின் செல்போனை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து, செல்போனை திருடியதாக தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த மதன்ராஜ் (21) என்பவரை கைது செய்தார். தொடர்ந்து மதன்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.