• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் முடிவு... திமுக, அதிமுக வேட்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

  • Share on

நடந்து முடிந்த 2022 ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உஷாதேவி தரப்பில் இருந்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஓர் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் ஆகியோர் தங்களது வேட்புமனுவில் தங்களது குற்ற பின்னணி குறித்த விபரத்தினை மறைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், இதனால் திமுக வேட்பாளர் சுரேஷ்குமாரின் வெற்றி மற்றும் 39வது வார்டில் நடைபெற்ற தேர்தல் செல்லாது எனக்கோரியும், மறுத்தேர்தல் நடத்தக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளரும், மத்திய அரசு வழக்கறிஞருமான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளரும், மத்திய அரசு வழக்கறிஞருமான சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் : 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வழக்கப்பட்ட வேட்புமனுவில் 14 வது பாராவில் வேட்பாளரின் குற்ற பின்னணி விபரத்தினை தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. அதில் தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை எனவும்,  நிலுவையிலும் இல்லை எனவும் 39 வது வார்டு திமுக வேட்பாளரும், தற்போதைய மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

ஆனால், 4.12.2021 அன்று அவர் மீது  புகார் கொடுத்தவரும் அவரும் சமரசமாக ஆவது என பேசி முடிக்கப்பட்டு அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த விபரத்தை அவர் வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

அதேபோல்,  39 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருச்சிற்றம்பலம் என்பவர் தன் மீது இரண்டு வழக்குகள் தான் நிலுவையில் இருந்ததாகவும், அதில் ஒன்றில் விடுதலையாகி விட்டதாகவும், இன்னொரு வழக்கில் ரூ.100 மற்றும் ரூ.1000 அபராதம் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் அவர் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக தேர்தலுக்கு முன்பும்  தற்போதும் கூட நீதி மன்றத்திற்கு விசாரனைக்காக வந்து சென்று கொண்டு இருக்கிறார். இதை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. 

ஆகவே, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் வேட்புமனுவில் குற்ற பின்னணியை மறைத்ததோடு, ,  திமுக வேட்பாளர் வெற்றிக்கு அதிமுக வேட்பாளர் மறைமுகமாக உதவியிருக்கிறார்.

இவர்கள் குற்ற பிண்ணணியை தெரிவித்து இருந்தால் பாஜக வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அதிகமாக இருந்திருக்கும். எனவே, இவர்கள் தங்களது குற்ற பின்னணியை வேட்மனுவில் மறைந்துள்ளதாகவும், 39வது வார்டில் நடைபெற்ற தேர்தல் செல்லாது எனக்கோரியும், மறுத்தேர்தல் நடத்தக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மேலும், அதிமுக வேட்பாளரின் கல்வித்தகுதி 10 ம் வகுப்பு என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நோட்டிசிலும், ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் செய்த தேர்தல் பரப்புரையிலும் BA படித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் 16-02-2022 ல் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும் பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் உஷாதேவி, பாஜக தகவல்தொழில் நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், கிழக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் கௌரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் ரூ.36 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது!

தூத்துக்குடியில் 2¼ வயது பெண் குழந்தை சுவரில் அடித்துக் கொடூர கொலை - தாயின் 2-வது கணவர் கைது!

  • Share on