• vilasalnews@gmail.com

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 9ம் ஆண்டு நினைவு நாள் - மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை

  • Share on

தூத்துக்குடியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு  அவரது திருஉருவப்படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி வி.இ ரோடு காமராஜ் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவப்படத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,திமுக மாநகர மருத்துவர் அணி செயலாளர் அருண்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் கதிர்வேல், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்டிவேல், மாநகர மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் டேவிட் பிரபாகர், ஜெயக்கொடி, வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், மதசார்பற்ற ஜனதா தளம் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் நகை கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு வெள்ளி பொருட்கள் திருட்டு - 4 மணி நேரத்தில் திருடியவர்கள் கைது - தென்பாகம் காவல் நிலைய போலீசார் அதிரடி

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் மரியாதை!

  • Share on