• vilasalnews@gmail.com

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

  • Share on

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் நிர்வாகிகள்  பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் "விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற திரைப்படங்கள் முஸ்லீம் சமுதாயத்தை பயங்கரவாத சமுதாயமாக இழிவுபடுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.  

சமீபத்தில் வெளியாகி உள்ள விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது இஸ்லாமிய சமூகத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த திரைப்படத்தினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

தொழில்வாரியான நலவாரியம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் - அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கலங்கலான குடிநீர் புகார் - வல்லநாடு நீரேற்று நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு

  • Share on