மத்திய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை தமிழக அரசு புறக்கணித்து முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வந்த தொழில்வாரியான நலவாரியங்களை காத்திட தமிழக அரசு உடனடியாக சிறப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றக் கோரி தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டு வரப்பட்ட 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை புறக்கணித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982யும், அதன் கீழ் இயங்கும் 18 நலவாரியங்களையும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நல சட்டம் 2007யும் விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு மீன் மற்றும் மீன் சார்பு தொழிலாளர் நல சட்டம் 2007யும் மீனவர் நலவாரியம் மற்றும் பிற துறைகளில் இயங்கும் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கிய 36 நலவாரியங்களையும் பாதுகாப்பதற்கு நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சிறப்பு தீர்மானம் இயற்றப்பட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தொழிலாளர், தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறித்து நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களையும் திரும்ப பெற மாநில அரசு வற்புறுத்த வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.