தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேசன்கடை திறப்பு விழாவிற்கு தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமை வகித்தார்.
உதவி பங்குதந்தை பிபின் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை செயலாளர் அம்பாசங்கர், மாவட்ட ஆதிதிராவிட நல அணி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரெங்கசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், ஊர்கமிட்டி தலைவர் விக்டர், உப தலைவர் தொம்மை அந்தோணி, செயலாளர் வினோத்சிங், பொருளாளர் விமல், உதவி செயலாளர் நிக்சன், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.