சிவத்தையாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
ஏரல் தாலுகா சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வீடுகளில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவத்தையாபுரம் கிராமத்தில் கான் மூலம் சிவத்தையாபுரத்தில் உள்ள குளத்தில் மூன்று இடங்களில் சென்று கலக்கிறது. இதனால், குளங்களில் உள்ள தண்ணீர் அனைத்தும் மாசுபட்டு கருப்புநிறத்தில் சாக்கடை நீராக மாறி உள்ளது. இந்த குளமானது தாமிரபரணி ஆற்றின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் வாய்க்கால் மூலம் சிவத்தையாபுரம், பேய்க்குளம், குலையன்கரிசல் குளம், பழைய காயல், மஞ்சள்நீர் காயல், அத்திரமரபட்டி குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு, சிவத்தையாபுரம், புளியநகர், நந்தகோபாலபுரம், சக்கம்மாள்புரம், போடம்மாள்புரம், திருமலையாபுரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, மஞ்சள் நீர்காயல், பழையகாயல், சோலைபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்படி குளங்களில் உள்ள மாசுபட்ட சாக்கடை போன்ற தண்ணீரை தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், கால்நடைகள் வளர்ப்புக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு ஊரல் மற்றும் தோல்நோய்களின் மூலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்படி குளத்தின் தண்ணீர் மாசுபட்டு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மிகபெரிய அளவில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, சிவத்தையாபுரம் ஊரில் வீடுகளில் உள்ள கழிவுநீர் கான் மூலம் மூன்று இடங்களில் குளத்தில் சென்று கலக்கிறது. மேற்படி இடங்களை சுகாதார அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் குளத்தில் கலக்கும் மேற்படி இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரித்து நல்லநீராக மாற்றி குளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அம்மனுவில் கூறிப்பிடப்பட்டிருந்தது.