தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டு!
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கமத்திற்க உட்பட்ட அனைத்து கிளை சங்கம் சார்பில் மணிநகரில் உள்ள சங்கத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
பாராட்டு விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசுகையில்
தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொழில் வளம் பெருகுவதற்கு துணையாக இருக்கும் அரசு. கடந்த மாதம் தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதே போல் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்குரிய மாநிலமாக உருவாகி வருகிறது. அதற்கும் அரசு விதிமுறைகளின் படி உதவிகள் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி தொழில் வளம் பெருகும் போது தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும். அதே போல் தூத்துக்குடி மாநகரில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன.
புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும்; மாசு இல்லாத தொழிற்சாலைகளையும் தொழில் நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகர பகுதி முழுவதும் பசுமையான மாநகரமாக உருவாக்க எல்லா வகையில் வளர்ச்சியடைவதற்கும் சில ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்கும் நீங்களும் ஓத்துழைப்பு தரவேண்டும் வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கான விதிமுறைகள் அதற்கான அரசு சார்ந்த பணிகளை மாநகராட்சி சார்பில் விரைவாக வழங்கி உதவிடுவேன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வருவேன் என்று பேசினார்.
வியாபாரிகள் சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கனவே இருந்த கடைகாரர்களுக்கு மீண்டும் அவர்களுக்கே கடைகள் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை மேயரிடம் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த புதிதாக தோந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், கந்தசாமி, சரண்யா ராஜ்குமார், ராஜதுரை ஆகியோருக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் சட்ட ஆலோசகர் வக்கீல் சொக்கலிங்கம், சங்கநிர்வாகிகள் பிஎஸ்கே. மாரியப்பன், ராஜா, செந்தில் ஆறுமுகம், பாலமுருகன், உள்பட அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.