தூத்துக்குடியில் 23 கோடியில் மீனவர்கள் திட்டம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 21 கோடி மதிப்பீல் மீன்இறங்கும் தளத்தினை மேம்படுத்தும் பணி தெர்மல்நகர் மீனவர் காலணியில் 2 கோடி மதிப்பீல் காண்கீரிட் சாலை வசதிகளுடன் மீன் ஏலக்கூடம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை உதவி பொறியாளர் தயாநிதி வரவேற்புரையாற்றினார்.
திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி கனிமொழி எம்.பி பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் காது கொடுத்து கேட்பதற்கு ஆளில்லை. கோரிக்கை வைத்தும் நிறைவேறவும் இல்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற 11 மாதகாலத்திற்குள் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை எப்பொழுதுமே நிறைவேற்றும் அந்த நம்பிக்கை மக்களுக்கு உண்டு கலைஞர் ஆட்சியிலும் சொன்னதை செய்தோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை 23 கோடி மதிப்பீல் இங்கு தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தொடர்ந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடி வருகிறோம். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூக ஒற்றுமையை நிலைநாட்டுகிறோம். மீனவர்கள் இலங்கை அரசால் பாதிக்கப்படும் போது ஓவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி அவர்களை பாதுகாப்பது மட்டுமின்றி படகுகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கிறோம் முடியாத பட்சத்தில் அதற்குரிய தொகையை நம்முடைய முதல்வர் வழங்கி வருகிறார்.
விவசாயிகளுக்கு தனி வங்கி இருப்பது போல் மீனவர்களுக்கும் தனி வங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அது செயல்படுத்தப்படும். திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இரண்டு அமைச்சர்களும் உங்களுக்கான திட்டங்களை செய்து வருகின்றனர். இப்போது மேயரும் உங்களுக்காக பணியாற்றுகிறார் என்றார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் படி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து உங்களது கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் ஜாதி மதத்தின் பெயரால் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சிக்கு இடம் அளிக்காமல் தமிழன் என்ற பெருமையோடு தமிழகத்தின் தன்மானத்தை காக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் மீனவர்களின் நலன் காக்கும் அரசாக திமுக எப்போதும் செயல்படும் அதிலும் முதலமைச்சர் எங்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டும். அதற்காக தனி வங்கி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மீனவர்களுக்கு என்று தனிவங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் எளிதில் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் அதே போல் மீன்பிடித்தடைகாலத்தில் கடந்த ஆட்சியில் 5 ஆயிரம் வழங்கப்பட்டது. அதுவும் நாகப்பட்டிணம் ராமநாதபுரம் மாவட்டங்களில் வழங்கியது போல் இங்கு முறையாக வழங்கபடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது முறையாக வழங்கப்படும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்று உங்களது கோரிக்கையை முதலமைச்சர் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார். அதுபோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. ஒன்றிய அரசால் பாதிக்கப்பட்ட நீங்கள் மாணிய விலையில் வழங்குவதை கூடுதல் சலுகைகளுடன் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதையும் முதலமைச்சர் அறிவிப்பார். முதலமைச்சர் உத்தரவு படி மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள் அதையும் நிறைவேற்றி தருவோம். தமிழகத்தில் திமுகவைத்தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்ற நிலை உருவாக்குவோம். தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறந்து அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான் மார்களாக வாழந்து கொண்டிருக்கும் நம்மை சிலர் சூழ்ச்சி செய்து பிரிவினை ஏற்படுத்த நினைப்பார்கள் அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக வாழவேண்டும் உங்களுக்கான அனைத்து திட்டங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவோம் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், 2006ல் திமுக ஆட்சி காலத்திற்கு பின்பு இந்த பகுதி மக்களுக்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. கழக ஆட்சி வந்த பிறகு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன. மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் எல்லா பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு அனைவரும் துணையாக இருந்து எதிர்காலங்களில் இதே போல் ஆதரவு தரவேண்டும் என்றார்.
விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், அவைத்தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் மேகநாதன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், தொண்டரணி செயலாளர் உமாதேவி, இலக்கி அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மாநகர மீனவரணி செயலாளர் டேனி, மருத்துவணி செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு, ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ஜெயசீலி, ஜெபஸ்டின் சுதா, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, தொமுச மரியதாஸ், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட் பிரதிநிதிகள் பிரபாகரன், லிங்கராஜா, மற்றும் கருணா, மணி, மகேஸ்வரசிங், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் , முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், கவுன்சிலர் சுயம்பு, மீன்வளத்துறை இனை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் வயோலா தாசில்தார் செல்வகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.