தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி, அதிமுக செல்லப்பாண்டியன், சண்முகநாதன் உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.
அம்பேத்கார் 131வது பிறந்தநாளை முன்னிட்டு தென்பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள அவரது திருஉருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து சமத்துவ திருநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் பரமசிவம், ரமேஷ், கஸ்தூரி தங்கம், அந்தோணி ஸ்டாலின், ஜெபசிங், துணைச் செயலாளர்கள் பெருமாள், சேசையா, தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெபகனி, துணை செயலாளர்கள் பால்ராஜ், பால்மாரி, கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, கவுன்சிலர்கள் வைதேகி, ராஜேந்திரன், நாகேஸ்வரி, ராமர், சரவணக்குமார், விஜயகுமார், கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், தொமுசா நிர்வாகிகள் முருகன், மரியதாஸ். வட்டச் செயலாளர்கள் டென்சிங், மூக்கையா, சாரதி, பொன்ராஜ், வட்ட பிரதிநிதிகள் துரை, சுப்பையா மற்றும் பெனில், கருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாருமான சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில், மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், துணைச் செயலாளர்கள் சந்தானம், செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர், ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன், காசிராஜன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, மாவட்ட அணி செயலாளர்கள் வீரபாகு, பிரபாகர், தனராஜ், அருண் ஜெபகுமார், ராஜா, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் வலசை வெயிலுமுத்து, சரவணப்பெருமாள் மற்றும் வக்கீல் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்தனர். பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் ராஜகோபால், வக்கீல்கள் ராஜாராம், ஆன்ட்ருமணி, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் ஞான்ராஜ், நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி, டைமன்ராஜ், திருமணி, ஞானபுஷ்பம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிஜேபி சார்பில் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் பால்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சின்னத்துரை, மாநகர செயலாளர் கணேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கரும்பன், மாநகர செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்தனர். கவுன்சிலர் தனலெட்சுமி, வக்கீல் சந்தனசேகர் மற்றும் மாடசாமி, சுப்பிரமணி கலந்து கொண்டனர்.
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா மற்றும் முத்து ஆகியோர் மாலை அணிவித்தனர்.
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில் மாலை அணிவித்தனர்.