• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 18 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி அமுதா, தூத்துக்குடி சிப்காட் (நிலவங்கி) தனி தாசில்தாராகவும், கயத்தாறு பேச்சிமுத்து, தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு பிரிவு-2 தனிதாசில்தாராகவும், சிப்காட் நிலவங்கி தனிதாசில்தார் கிருஷ்ணகுமாரி, எட்டயபுரம் தாசில்தாராகவும், சிப்காட்-2 நிலஎடுப்பு தனி தாசில்தார் சுசிலா கோவில்பட்டி தாசில்தாராகவும், சிப்காட் நிலஎடுப்பு தனிதாசில்தார் சுப்புலட்சுமி கயத்தார் தாசில்தாராகவும், தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் செல்வக்குமார், தூத்துக்குடி தாசில்தாராகவும், தூத்துக்குடி சிப்காட்-9 தனி தாசில்தார் சுரேஷ், கோவில்பட்டி நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

எட்டயபுரம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் தாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் விமலா, தூத்துக்குடி சிப்காட்-7 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், திருச்செந்தூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராகவும், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் சந்திரன், தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ரகு, ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் எஸ்.கே.முத்து, உடன்குடி அனல்மின்நிலைய திட்டம் விரிவாக்க நில எடுப்பு தனி தாசில்தாராகவும், விடுப்பில் இருந்த முன்னாள் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அழகர், திருச்செந்தூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு தனிதாசில்தார் சிவகாமசுந்தரி, தூத்துக்குடி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி நகர நிலவரித்திட்ட தனிதாசில்தார் லட்சுமி கணேஷ், தூத்துக்குடி சிப்காட்-4 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் ராஜ்குமார், திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : எஸ்.பி., அதிரடி!!

அம்பேத்கர் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி, அதிமுக செல்லப்பாண்டியன், சண்முகநாதன் உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on