• vilasalnews@gmail.com

மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!

  • Share on

மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்; ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், ராமர், கந்தசாமி, வைதேகி, ராஜதுரை, ராஜேந்திரன், முத்துவேல், சுயம்பு, விஜயகுமார், சுரேஷ்குமார், நாகேஸ்வரி, இசக்கிராஜா, பச்சிராஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின்; மகேஸ்வரி, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மும்தாஜ், சிபிஎம். முத்துமாரி, மதிமுக ராமுஅம்மாள், காங்கிரஸ் சந்திரபோஸ், கற்பகக்கனி, உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலர் தங்களது பகுதியில் செய்த பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி நன்றியை தெரிவித்து பேசினார்கள். சில கேள்விகளுக்கு ஆணையர் சாரூஸ்ரீ, செயற் பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா ஆகியோர் பதிலளித்தனர்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி  பேசுகையில், பொதுமக்களுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிர்வாக செலவிற்காகவும், மாநகராட்சியின் பழைய கடன்களுக்காகவும் ரூ.226.05 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பொதுமக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு 25 சதவீதம் முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநகராட்சியில் முதல் முறையாக லெவிஞ்சிபுரம் வாட்டர் டேங்கிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு பழைய குடிநீர் இணைப்புகளுக்கு பதிலாக புதிய பைப்லைன் வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில் தெருக்குழாய்கள் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியில் வரிகளை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரியை  உயர்த்துவதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் அதிமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன்  மற்றும் கவுன்சிலர்கள் சரண்யா, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின், அதிஷ்டமணி, ரெங்கசாமி, , கண்ணன், விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், தனலட்சுமி, ரிக்டா, சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, மெட்டில்டா, பவாணி மார்ஷல், உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் தொடங்கியதும் முன்னாள் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் அமிர்த கணேசன் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம், வெளிநடப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : எஸ்.பி., அதிரடி!!

  • Share on