• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம், வெளிநடப்பு:

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம், வெளிநடப்பு:

தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று காலை கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அதிமுகவினர்க்கு முன் இருக்கையில் இடம் தறாமல் பின் இருக்கையில் அமர வைத்து அதிமுகவினரை வஞ்சிக்கும் செயல் என மேயரிடம் வலியுறுத்தினர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து முழங்கியவாரே மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. 

பின்னர் அதிமுக எதிர்கட்சி செயலாளர் ராஜா கூறுகையில், கூட்டத்தில் தங்களுக்கென இருக்கை கொடுக்காமல் வஞ்சிகின்றனர். இதனை மேயரிடம் முறையிட்டும் அவர் எங்களை நிராகரிகிறார்...

ஏழை, எளிய நடுத்தர மக்களை திமுக அரசு வஞ்சிகிறது. கோரோனா கால கட்டத்தில் இருந்து மீண்டு வரும் வேலையில் மக்களிடம் சொத்து வரி உயர்த்தியது வேதனையளிக்கிறது. என கூறிய அவர், இதனை எதிர்த்து கேட்டால் எதிர் கட்சியான எங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்க மறுகிறார்கள்.. என கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க மேயரிடம் கோரிக்கை!

மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!

  • Share on