• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க மேயரிடம் கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க மேயரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பிரதான சாலையான ஜெயராஜ் ரோடு சந்திப்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் மின்கட்டணம் செலுத்துவதற்கும் அது சம்பந்தமான குறைகளை தெரிவிப்பதற்கும் பொதுமக்கள் வந்து செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மின்வாரிய உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் வந்து செல்லும் அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேவையற்ற செடிகளையும் அப்புறப்படுத்தி சாலையை புதுப்பித்து தருமாறு தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் மாணவரணி துணை அமைப்பாளர் சரவணபெருமர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் தராசு மகாராஜன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், சண்முகபுரம் பகுதிசெயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • Share on

புதிய பேருந்து நிலையம் அருகே மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம், வெளிநடப்பு:

  • Share on