ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கம்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
காயல்பட்டினம் ஒடக்கரை பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் தங்கப்பன் (85), என்பவரும் காயல்பட்டினம் சிங்கிதுரை பகுதியை சேர்ந்த சையது முகம்மது மாலிக் (40) என்பவரும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதையில் நின்றுகொண்டிருக்கும்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாலிக் மேற்படி தங்கப்பனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து தங்கப்பனின் மகன் இசக்கிமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்குபதிவு செய்து மேற்படி மாலிக்கை கைது செய்தார்.