ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று (10.04.2022) ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் உள்ள தோட்டத்தில், ஓட்டப்பிடாரம் பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர்களான அந்தோணி மகன் ஜெயம் (50), பிச்சையா மகன் மாரியப்பன் (40), குறுக்குசாலை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வேலாயுத பெருமாள் (37) மற்றும் மேலதட்டப்பாறை பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் பொன்மாடசாமி (31) ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா வழக்குபதிவு செய்து மேற்படி 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 5,300/- பணத்தையும் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்தார்.