திமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன் கனிமொழி எம்பி யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளர் மீது கடந்த நவம்பர் மாதம் திமுக நிர்வாகி எஸ்.ஜே.ஜெகன் தாக்தல் நடத்தியது தொடர்பான புகாரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.பில்லா ஜெகன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது, திமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன் கனிமொழி எம்பி யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார்.