• vilasalnews@gmail.com

எட்டையாபுரத்தில் மூட்டைகளில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

  • Share on

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 1டன்  ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு   சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது காவலர்களை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவலர்கள் அங்கு சென்று பார்க்கும் போது  1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் மேற்படி   சுமார் 1டன் ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து, தப்பிச் சென்றவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து - காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பி ஆறுதல்!

மீண்டும் திமுகவில் பில்லா ஜெகன் - கனிமொழி எம்பியிடம் வாழ்த்து

  • Share on