• vilasalnews@gmail.com

திருச்செந்தூா் கோயிலில் ரூ.1.47 கோடி உண்டியல் வருவாய்

  • Share on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.1.47 கோடி பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா்(பொ) சி.குமரதுரை தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உதவி ஆணையா்கள் ரத்தினவேல் பாண்டியன் (நாகா்கோவில்), வெங்கடேஷ் (திருச்செந்தூா்), ஆய்வா்கள் செந்தில்நாயகி, முப்பிடாதி, தக்காா் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

பொதுமக்கள் சாா்பில் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனா். இதில், 13 நாள்களில், ரூ. 1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 மற்றும் தங்கம் 1,300 கிராம், வெள்ளி 45 ஆயிரத்து 562 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 36-ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

  • Share on

புதூர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

CSI போல் பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் குருத்தோலை பவனி நடைபெற்றது.!

  • Share on