புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதூர் நல்லமூப்பன் மடம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வசந்தா (54) என்பவருக்கும் செங்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் பச்சை பெருமாள் (41) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (09.04.2022) வசந்தா அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பச்சை பெருமாள் வசந்தாவிடம் தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரை வழக்கு பதிவு செய்து பச்சை பெருமாள் என்பவரை கைது செய்தார்.