பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அதிமுக பிஜேபி போராட்டம் நடத்தாதது ஏன்? தூத்துக்குடி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், எழிலன், மேயர் ஜெகன் பெரியசாமி கேள்வியேழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் வழியில் அவர்களது திட்டங்களை பின்பற்றி ஆட்சி நடைபெறுகிறது. வேலை வாய்ப்பு வேறு மாநிலத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்ததை தடுக்கும் வகையில் சட்டமாக்கி தமிழகத்தில் தமிழர்களுக்குதான் வேலை என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்கினார். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நமக்கு நாமே திட்டம் என்று பல சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட சமத்துவபுரம் திறக்காமல் இருந்ததை சமீபத்தில் முதலமைச்சர் நேரில்சென்று திறந்து வைத்தார். வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்பதற்காக துபாய்க்கு சென்ற 6 ஆயிரம் கோடி முதலீடுகளை கொண்டுவந்துள்ளார். அதன மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தூத்துக்குடியில் 1000 கோடியில் சர்வதேச அளவில் பர்னிச்சர் பார்க் திட்டமும் வரவுள்ளது. மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும் நாடு முன்னேற வேண்டும். என்று உழைத்து கொண்டிருக்கிறார் முதல்வர் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் வர்ணிக்கின்றனர்.
முதலமைச்சர் நான் நம்பர் ஓன்னாக இருக்க விரும்பவில்லை தமிழகம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து நம்பர் ஒன் மாநிலமாக விளங்க வேண்டும் என்று கூறிவருகிறார். ஓன்றிய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கொண்டே வருகிறது. இதை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்த ஏன் முன் வரவில்லை. ஆட்சி பறிபோன பிறகும் மோடிக்கு பயமா? சட்டமன்றத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு முதலமைச்சர் முறையாக பதிலளிக்கிறார். சில விஷயங்களுக்கு வெளிநடப்பு செய்து சென்று விடுகிறார்கள் அதிமுகவினர். கடந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்ஐஆர் கூட போடாத நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருக்கோவில்கள் குடமுழக்கு விழா நடைபெற்றுள்ளது. 7.5 சதவீத இட ஓதுக்கீடு மூலம் மாணவர்கள் பட்டய படிப்புக்கு பயனடைந்து வருகின்றனர்.
கல்லூரி படிப்பை தொடங்குவதற்கும் மாதம் 1000ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. குறவன் குறத்திகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி சிறப்பான பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ பேசுகையில், கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக கடன் மேல் கடன்வாங்கி தமிழக அரசை மூழ்கும் கப்பலாக வைத்து விட்டு சென்று விட்டனர். ஓரு குடும்பம் என்றால் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்பதை கணக்கீட வேண்டும் ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமையை அதிகரித்துக்கொண்டே சென்றது தான் அவர்களது சாதனை செலவை குறைத்து வருவாயை பெருக்குவதற்கு எந்த திட்டமும் தீட்டவில்லை கழக தலைவர் பொறுப்பேற்ற பின் நிதி அமைச்சர் தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டார். தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 7500 கோடி நிதிநிலை சுமை சற்றுக்குறைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனை வெளிநாடு சென்று பல ஓப்பந்தங்கள் போடப்பட்டதின் மூலம் வேலை வாய்ப்பு பெருக்குவதற்கும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் தான் முதலமைச்சர் சென்று வந்தார். உங்களை போல் ஓப்பந்தங்களை போட்டுவிட்டு அந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் இருந்தது தான் உங்களது சாதனை ஓரு நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்றால் கல்வி சுகாதாரம் போன்ற பல்வேறு கட்டமைப்புகள் முறையாக இருக்க வேண்டும் சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதன் தலைவர் அண்ணாமலைக்கு நான் ஓருகேள்வி கேட்கிறேன் ஓரே வாரத்தில் 14 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியுள்ளீர்கள் அதை கண்டித்து ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் வரி உயர்வு இல்லை தற்போது உயர்த்தியதில் 17 சதவீதம் பேர் தான் கட்டப்போகின்றனர். ஒன்றிய அரசின் சில வழிகாட்டுதலின் படி இது உயர்த்த வேண்டிய கட்டாயம் இதன் மூலம் ஓன்றிய அரசு தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி வழங்கவுள்ளது. அதன் மூலம் பல வளர்ச்சி பணிகளும் திட்டங்களும் நடைபெறும் இதை தடுப்பதற்கு அண்ணாமலை முயற்சிக்கிறாரா. என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. இதுபோன்று பல்வேறு சாதனைகளை தொடர்;ந்து செய்திட தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார் என்றார்.
மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில், விலைவாசி உயர்வுக்கு முதல்காரணமே பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் இந்த விலை உயர்வின் மூலம் எல்லா பொருட்களுமே விலை உயர்கிறது. இவ்வளவு விலை உயர்ந்தும் தமிழக அரசு ரேசனில் வழங்கப்படும் எந்த பொருட்களுக்கும் விலை உயர்த்தப்படவில்லை. முதலமைச்சர் ஓவ்;வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக பார்த்து நாட்டுமக்களை பாதுகாத்து வருகிறார் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 11 மாதம் காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு நெருக்கடி நிலையிலும் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்று தடுப்பு ஊசி முதல்வர் செலுத்திய பின் அனைவரும் இதே போல் தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில்; ஆயிரகணக்கிலிருந்த கொரோனா தடுக்கப்பட்டுள்ளது. அடுத்து பல்வேறு கட்டப்பணிகளையும் நடத்தி உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. பல்வேறு தொழில் ஓப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரிகள் மூலம் பணிகள் நடைபெற்றன. தற்போது என்னை மேயர் வேட்பாளராக அறிவித்து நான் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் தளபதி கனிமொழி எம்.பி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி பணியாற்றி வருகிறேன். சீர்மிகு மாநகராட்சியாக உருவாகுவதற்கு பணியாற்றி வரும் வேலையில் சில அதிமுக புள்ளுருவிகள் விமர்சனம் செய்து வருகின்றன நீங்கள் செய்த தவறுகளும் என்னிடம் இருக்கின்றன. விமர்சனங்களை இதோடு விட்டு விட வேண்டும் இல்லை என்றால் சட்டம் படித்த வக்கீலாக நீங்கள் இருந்தாலும் நானும் சட்டம் தெரிந்தவன் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
கூட்டத்தில், தலைமை பேச்சாளர் இஸ்மாயில், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், காசி விஸ்வநாதன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்டிஆர் பொன்சீலன், கஸ்தூரி தங்கம், உமாதேவி, அபிராமி நாதன், அந்தோணிஸ்டாலின், பிரதீப் ராமர், சீனிவாசன், நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் மோகன்தாஸ், சுபேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், கதிரேசன், சக்திவேல், ராஜ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், உலகநாதன், பால்ராஜ், அருண்சுந்தர், டேனியல், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, கவுன்சிலர்கள் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, சோமசுந்தரி, ஜான்சிராணி, சரண்யா, அதிஷ்டமணி, கந்தசாமி, பொன்னப்பன், வைதேகி, சரவணக்குமார், முத்துவேல், விஜயகுமார், இசக்கிராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார். ராமகிருஷ்ணன், நிர்வாகிகள்;, கருணா, பிரபாகரன், அல்பட், மகேஸ்வரசிங், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார். ஜெயசிங், செல்வகுமார், செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.