தூத்துக்குடி திரு இருதய ஆண்டவர் கோவிலில் இன்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர், பங்கு தந்தை, பங்கு இறைமக்கள், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
ஏசுவின் சிலுவைபாடுகளையும், உயிர்த்தெழுதலையும் தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப் பிடிக்கின்றனர், லெந்து காலம் என்றழைக்கப்படும் இந்நாட்களில் விருந் தோம்பலை தவிர்த்து விடுவர். இந்தாண்டுக்கான தவக்காலம் கடந்த மார்ச் 2ம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. . இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் துவக்க நாளான இன்று (10ம் தேதி) குருத் தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. ஏசு, சீடர் களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த போது ஆலிவ் மரக்கிளைகளுடன் அங்குள்ள மக்கள் வரவேற்றதை நினைவு கூறும் விதமாக இந்த குருத்தோலை பவனி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி திரு இருதய ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அண்டனி, முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் பங்குத்தந்தை ரோலிங்டன், பங்கு இறைமக்கள், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.