• vilasalnews@gmail.com

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

  • Share on

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமம் வசந்த நகரைச் சேர்ந்த தாமஸ் சாமுவேல் (வயது 57) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அங்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பத்மாவதி, பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல், 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமஸ் சாமுவேலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் - அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் 12 பேர்.... 2 கேரள இளைஞர்களை அமுக்கிய போலீஸ்!

  • Share on