தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் முன்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,மேற்கு பகுதி செயலாளர் ரவீந்திரன், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் அதிஷ்டஅணி, வட்ட பிரதிநிதி குமார், தகவல் தொழில் நுட்ப அணி மார்க்கின் ராபர்ட், கோகுல்நாத், முனியராஜ் அந்தோணிராஜ், சதீஷ்குமார், பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.