
மத்திய, மாநில அரசைக் கண்டித்து தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக எரிவாயு உருளை தொடர் விலை உயர்வையும், தமிழக அரசின் சொத்து வரி உயர்வையும் கண்டித்து தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன.மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, வீட்டு உபயோக சிலிண்டருக்கு இறுதி சடங்கு நடத்தியும், ஆட்டோ ஒன்றினை கயிறு கட்டி இழுத்து சென்றும் நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் ஜவஹர், சேகர், ரமேஷ், மாவட்ட துணைச்செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் பாலா, மண்டல வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், மண்டல இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி யோகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.