மாப்பிள்ளையூரணி சுனாமி காலணியில் அங்கன்வாடி கோரிக்கை எம்.எல்.ஏ சண்முகையாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் குடியிருந்து வருகின்றன.
சுமார் 34 ஆயிரம் பேர் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களாக இருந்து வருகின்றன. 50க்கும் மேற்பட்ட ஊர்கள் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது அப்பகுதியில் உள்ள கனபதி நகர், சுனாமி காலணியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து சரவணக்குமார் மூலம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் 6ம் தேதி தொடங்கி மாணிய கோரிக்கை அமைச்சர்களால் தாக்கல் செய்து கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேரவை தலைவர் மூலமாக அவரது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அங்கன் வாடி அமைக்க கோரிக்கை வைத்துள்ள்ளார்.
அதிலும் குறிப்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கணபதிநகர் சுனாமி காலணி பகுதியில் 50 குழந்தைகள் இருக்கும் பகுதிக்கு அங்கன்வாடி அமைத்து தரவேண்டி கடந்த 22.3.22 அன்று சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மனு கொடுத்துள்ள்ளார்.
இதற்கு சட்டசபையில் சமூகநலன் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், அங்கு கட்டிடம் இருக்கிறது. குழந்தைகள் மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே தொகுதிக்குட்பட்ட மற்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளுக்கு இதற்கு உறுதியளித்த அமைச்சருக்கும் அரசுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சென்னையில் எம். எல். எ சண்முகையாவுக்கு பஞ்சாயத்து தலைவர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.