ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறையின் கீழ் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் நேற்றைய முன் தினம் தமிழ்நாடு உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் மாநிலகல்வி அமைப்பின் உதவியுடன் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கமானது இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தொடங்கப்பட்டது.
பேராசிரியர் ரத்னா வரவேற்புரை ஆழ்த்தினார். கல்லூரி முதல்வர் மீனாகுமாரி வாழ்த்துறையாற்றினார்.
தொடர்ந்து, இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் திருநெல்வேலி, ம.தி.தா. இந்து கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் சிலம்பரசன் காமா கதிர்கள் குறித்தும் இரண்டாம் அமர்வில் தென்காசி, ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர். நரேஷ்முத்து அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இக்கருத்தரங்கின் நிறைவாகப் பங்கு பெற்ற பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கினர்.