• vilasalnews@gmail.com

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

  • Share on

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2022 (01.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2022 (31.03.2022) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும் )

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

6. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் : 10.05.2022 அன்று மாலை 4.00 மணி

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ்  தெரிவித்துள்ளார்

  • Share on

தூத்துக்குடி சலவைத்துறை கட்டுமானப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்!

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறையின் கீழ் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

  • Share on