• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சலவைத்துறை கட்டுமானப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்!

  • Share on

தூத்துக்குடி சலவைத்துறை கட்டுமானப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மையவாடி பகுதியில் சலவைத் துறையினருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் துணி உடைகள் துவைத்து உலர வைக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அதை நிறைவேற்றி தரவேண்டும் என்று சலவை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி அப்பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டு வரும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று முடியாமல் இருப்பதை திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். நல்ல முறையில் பணிகள் முடிந்து சலவை துறையினருக்கு குறைபாடுகள் ஏதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்று கட்டுமான ஓப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது திமுக வட்டச்செயலாளரும் கவுன்சிலருமான கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தூத்துக்குடி மாநகர சலவை தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் வள்ளிமுத்து, பொருளாளர் பாலமுருகன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், மற்றும் ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

  • Share on