சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் மன்சூர் அலி, உழக்குடி அசுபதி, மாவட்ட துணைச் செயலாளர் மருதன் வாழ்வு ரவி பெருமாள், ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தூர் பாண்டியன், ராஜா, இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், மாநகர மீனவர் அணி செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.