தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசின் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கோப்புகள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், இ சேவை மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பார்வையிட்டு கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் அரசின் கல்லூரி மாணவர் விடுதியில் உணவு அருந்தும் அறை, சமையல் அறை, பொருள் வைக்கப்படும் அறை, கழிப்பறை, காப்பாளர் அறை, இருப்பு பதிவேடு போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு அவற்றை நிவர்த்தி செய்ய காப்பாளருக்கும், துறை சார்ந்த அலுவலருக்கும் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ஜஸ்டின், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுகேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற செயல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.