தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபக தின விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் பாஜக ஸ்தாபக தினமான ஏப்ரல் 6ம் தேதி இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.எம். பால்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, கேக் வெட்டினார். தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச் செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குமார், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷா தேவி, சண்முகசுந்தரம், ஐடி பிரிவு மாநில செயலாளர் ரத்தின முரளி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.