• vilasalnews@gmail.com

எட்டையாபுரம் அருகே காரில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை - ஒருவர் கைது!

  • Share on

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில்  வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (05.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்ததில், அதில் எட்டையாபுரம் ஈராட்சி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் மாரிமுத்து (37) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக காரில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார்  மாரிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 6,000/- மதிப்புள்ள 15 கிலோ (750 Smal Pkts) எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ((TN 09 AJ 7367 Tata Indica Car)) காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மழைக்காலத்தில் வரும் காட்டாற்று வெள்ளத்தை தடுப்பது குறித்து கலெக்டர், மேயர், ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on