தூத்துக்குடி மழைக்காலத்தில் வரும் காட்டாற்று வெள்ளத்தை தடுப்பது குறித்து கலெக்டர், மேயர், ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 2 வருடமாக புறநகரிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதிக்குள் காட்டாற்று வெள்ளம் வருவதால் முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர் உள்பட பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 7ம் தேதி அப்பணிகள் குறித்து பார்வையிட்டு அடுத்து வரும் மழைக்காலத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையெடுத்து புதூர் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஓடை மற்றும் சங்கரப்பேரி, ஜோதிநகர், முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர் ஆகியப் பகுதிகளை பார்வையிட்டு பின்னர் ஓம் சாந்தி நகர் பகுதியில் நடைபெறும் புதிய பூங்கா ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மேற்கண்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் புதிய வடிகால் அமைத்து மழைக்காலத்திற்குள் பொதுமக்களின் நலன் கருதி பாதிக்கப்படாத வகையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா. உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, ராமசந்திரன். தாசில்தார் ஜஸ்டிஸ். கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ். வடக்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை செயலாளர் ராமர். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லிங்கராஜா மற்றும் ஜோஸ்பர். ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன். உதவி அலுவலர் உள்பட அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.