துாத்துக்குடி இயற்கை சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு தேடிச்சென்று உணவு வழங்கும் திருவிழா நடக்கிறது.
துாத்துக்குடி இயற்கை சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் தேடி தீர்ப்போம் பசியை என்ற அடிப்படையில் நகரில் ஆதரவற் றவர்களுக்கும், ஏழைகளுக்கும் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் சுமார் 50 ஆயிரம் பேருக்குதுாத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேடிச்சென்று அங்கு உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விழா நடக்கிறது.
இதில் உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் 0461-2360167 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடுகளை இயற்கை சாரிடபுள் இயற்கை ராஜாராம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் செய்துவ ருகின்றனர்.