• vilasalnews@gmail.com

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 33 பேருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

  • Share on

தூத்துக்குடி  மாவட்டத்தில்  கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய  3 ஆய்வாளர்கள் உட்பட 33 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டினார்

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 கிராம் நகைக்காக பெண்னை கொலை செய்த வழக்கில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட  2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 15,000/- மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர், தூத்துக்கு ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கடந்த 6 வருடங்களாக தலைமைறைவாக இருந்த 4 பேரை மும்பை சென்று கைது செய்த கோவில்பட்டி மேற்கு  குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் பத்மாவதி, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் உலகநாதன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் பாரதிகண்ணன் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய பெண் காவலர் முத்துலெட்சுமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கழுகுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 8,20,000/- மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ராணி, உதவி ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ராஜ்மோகன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாயர்புரம் காவல் நிலைய குற்ற வழக்கில் 2000ம் ஆண்டு முதல் தலைமைறைவாக இருந்த நபரை கைது செய்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா,  முதல் நிலை காவலர்கள் கைலேயங்கிரிவாசன் மற்றும் இளையராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 1995ம் ஆண்டு முதல் தலைமைறைவாக இருந்த நபரை கைது செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக்ராஜா மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் ரமேஷ்கண்ணன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்திய  4 பேரை கைது செய்து ஆவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலை முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார் மற்றும் திருமணிராஜன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 1,000/- அபராதமும் தண்டனை கிடைக்க துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பன்னீர்செல்வம் மற்றும் காவலர் அருண் சுந்தர் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் திருடுபோன இருசக்கர வாகனத்தை சில நிமிடங்களில் போன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகன தணிக்ககை செய்து திருடுபோன இருசக்கர வாகனத்தை மீட்டு சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து கடம்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் சந்தனகுமார், பொன்னுத்துரை மற்றும் காவலர் காரிராஜா ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

பசுவந்தனை காவல் நிலைய 102 வழக்குகளை கடந்த ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் முடித்தும், 5 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் 19 வழக்குகளின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பசுவந்தனை காவல் நிலைய காவலர் சுடலைமணி என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

லோக் அதாலத் நீதிமன்றத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய 78 வழக்குகளை முடித்தும் ரூபாய் 63,050/- அபராத தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்த திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரிமுத்து என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்!

மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜர் படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள்!

  • Share on