பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், மற்றும் கட்டுமான பொருட்கள், விலையேற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள VVD சிக்னல், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் தலைமையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ் தனுஷ்கோடி, மாநிலச் செயலாளர் சிந்தியா ஜெயக்குமார், OBC மாவட்ட தலைவர் எஸ்.எஸ் கணேஷ், ஊடகப்பிரிவு மாநில பொறுப்பாளர் முத்துமணி, டிசிடியு மண்டல தலைவர்கள் வில்லியம் பெர்னாண்டோ, அருண் தேவராஜ், ராஜப்பா, கண்ணன், மீனவர் அணி தலைவர் கென்னடி ராஜ், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்திக், கண்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.