• vilasalnews@gmail.com

காவலர் எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது : மையங்களில் எஸ்.பி., ஆய்வு

  • Share on

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புதுறை ஆகியவற்றிற்கான இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (13.12.2020)  நடைபெரும் தேர்வு மையங்களில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் இன்று சிறைத்துறை, தீயணைப்புதுறை ஆகியவற்றிற்கான இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு நடைபெருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இத் தேர்வானது மொத்தம் 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 3 ஆயிரத்து 54 பெண்கள் உட்பட, 16 ஆயிரத்து 134 விண்ணப்பதாரர்களுக்கு 14,465 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தம் 1669 பேர் கலந்து கொள்ளவில்லை.

ஆண் விண்ணப்பதாரர்களில் 11,816 பேர் தேர்வு எழுதியுள்ளனர், 1262 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

பெண் விண்ணப்பதாரர்களில்  2649 பேர் தேர்வு எழுதியுள்ளனர், 407  பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தேர்வை கண்காணிக்கும் பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில், 11 காவல்துறை துணை கண்காணிப்பாளர், 55 இன்ஸ்பெக்டர்கள், 180 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,400 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share on

"கருப்பர் கூட்ட முட்டாள் கூட்டமே"சீரிய ம.பி முதல்வர்

ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினி வெற்றி பெற இந்து மக்கள் கட்சி செயல்படும் - அர்ஜுன் சம்பத்

  • Share on