• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் மழை வெள்ள பாதிப்பு, சுகாதாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்

  • Share on

கோவில்பட்டியில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , அரசு அதிகாரிகள்,  அலுவலர்களுடன் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக இன்று (17.11.2020) ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நேரில் சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியை பார்வையிட்டார். அங்கு நகராட்சி மற்றும் வருவாய் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் லாயல்மில் காலணி பகுதியில் மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மழை நீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 2 தினங்களாக அதிக அளவில் மழை பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் கோவில்பட்டியை பொறுத்த வரை 72 மி.மி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் கூடுதலான வெள்ள நீர் சென்றுள்ளது. குறிப்பாக மார்க்கெட் பகுதியில் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு உள்ளது.

நகராட்சி மற்றும் வருவாய் துறையின் மூலம் இப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தவும் கோட்டாட்சியர், நகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர், வட்டாச்சியர் ஆகியோரிடம் செய்யப்பட்டுள்ள முன்னெற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு  கூட்டம் மேற்கொள்ளபட்டது. 

district-collector-rain-Vilasal News

மார்க்கெட் பகுதியில் உள்ள ஓடையில் மழை நீரை விரைவாக அகற்றும் வண்ணம் ஜேசிபி மூலம் வடிகால்களில் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டு மழை நீர் தங்கு தடையின்றி வெளியெறுவதற்கு பணிகள் போர்கால அடிப்படையில் செய்யபட்டு வருகிறது. தற்போது மழை காலமாக உள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சிய நீரை பருக வேண்டும் இதனால் கொள்ளை நோய்கள் வராமல் தவிர்க்க முடியும். நகராட்சி நிர்வாகம் மூலமாக குளோரினைசன், பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தி தொற்று நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை தற்போது 42 மோட்டார்களை பயன்படுத்தி தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. எங்கெல்லாம் மோட்டார்கள் பயன்படுத்த முடியாதோ அங்கு லாரிகள் மூலமாக மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 120 மோட்டார்கள் மழை நீரை அப்புறப்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

கூட்டம் மற்றும் ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் விஜயா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவில்பட்டி அனிதா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி நகராட்சி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், உதவி பொறியாளர் அலெக்ஸ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on

வடகிழக்கு பருவமழை தீவிரம் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்

  • Share on