• vilasalnews@gmail.com

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகிலுள்ள சவலாப்பேரியை அடுத்த  ஆலந்தா கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முருகேசன் (40). இவர் சவலாப்பேரி பஸ் ஸ்டாப் அருகே ஆவின் பாலகம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லையாம். 

இதனால் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் தான் மறைது வைத்து கொண்டுவந்த பெட்ரோலை  தனது உடலில்  ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Share on

மாப்பிள்ளையூரணியில் அமிர்தத்துளி சுகாதார நடைபயணம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஏப்.12ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்

  • Share on