• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் அமிர்தத்துளி சுகாதார நடைபயணம் நடைபெற்றது.

  • Share on

மாப்பிள்ளையூரணியில் அமிர்தத்துளி சுகாதார நடைபயணம் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடார சட்டமன்றத்துகுட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் அமிர்தத்துளி சுகாதார நடைபயணம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தூய்மை பாரத இயக்கம், ஊரகம் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் அமிர்தத்துளி சுகாதார நடைபயணம் பூ.பாண்டியாபுரம் பகுதியில்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், தூய்மை காவலர்கள் தங்களது பகுதிகளில் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது, வீடுகளில் உள்ள கழிவுநீர், சாலைகளில் வழிந்தோடாமல் தனது குடியிருப்புக்குள்ளேயே உரைக்கிணறுகள் மூலம் அமைத்து அதை சுகாதாரமான முறையில் பேணிக்காப்பதற்கு வேண்டிய உதவிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும், அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு கழிவுநீர்களை தெருக்களில் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். என கூறினர்.

நடைபயணத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், தங்கமாரிமுத்து, ராணி, ஜேசுராஜா, உமாமகேஸ்வரி, ஜீனத்பீவி, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் கணேசன், கிளைச் செயலாளர் காமராஜ், வட்டார முழு சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டம் - ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு

  • Share on