• vilasalnews@gmail.com

புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா மாட்டு வண்டி எல்கை பந்தயம் - கடம்பூர் ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வதுபிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதூரில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை  கடம்பூர் ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புதூர் வட்டார இராஜகம்பள மகாஜன சங்கம் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதூரில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றது.

இதில் பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

இந்த போட்டிகளை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புதூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தனஞ்செயன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ஞானகுருசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காந்தி காமாட்சி, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநில தலைவர் வரத ராஜன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் என்.கே.பி.வரதராஜ பெருமாள், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தெய்வேந்திரன், மேலநம்பியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தனபதி,

அதிமுக புதூர் நகரச் செயலாளர் ஆண்டி, விவசாய அணி வடக்கு மாவட்ட தலைவர் சௌந்திரராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மோகன்,  தகவல்தொழில்நுட்ப பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் யூவகிருஷ்ணன், உத்திரகுமார், புதூர் வட்டார இராஜகம்பள மகாஜனசங்கம் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பந்தய ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

புதியம்புத்தூரில் கஞ்சா விற்றவர் கைது - 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டம் - ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு

  • Share on