புதியம்புத்தூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவுபடி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் புதியம்புத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் பாலன் மற்றும் போலீசார் இன்று (02.04.2022) புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியம்புத்தூர், நீராவி மேட்டுத் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் புதியம்புத்தூர் நீராவி மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (31) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் முத்துகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.